குட்கா கும்பலை துணிச்சலுடன் பிடித்தபோலீஸ் ஏட்டுவுக்கு முதல்வர் விஜய் பாராட்டு

குட்கா கும்பலை துணிச்சலுடன் பிடித்தபோலீஸ் ஏட்டுவுக்கு முதல்வர் விஜய் பாராட்டு

குட்கா கடத்தல் கும்பலை துணிச்சலுடன் பிடித்த போலீஸ் ஏட்டு வேல்முருகனை முதல்வர் விஜய் பாராட்டி கவுரவித்தார்.

குட்கா கடத்தலை தடுத்த தலைமைக் காவலர் வேல் முருகனை நேரில் அழைத்து முதலமைச்சர் விஜய் பாராட்டியுள்ளார். காரில் தப்பிய கடத்தல்காரர்களை தடுக்க மேற்கூரையில் ஏறி 40 கி.மீ. பயணித்த தலைமைக் காவலர் வேல் முருகனின் துணிச்சல், சமயோசிதம், கடமை உணர்வைப் பாராட்டி முதலமைச்சர் நேரில் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

கோவை, கோவில்பாளையம் தலைமை ஏட்டு வேல்முருகன். குட்கா கடத்தல் கும்பலை, 40 கிமீ துாரம் காரின் மேற்கூரையில் பயணித்து, உயிரையும் பொருட்படுத்தாமல் விரட்டி சென்று கைது செய்தார். அவருக்கு மேற்கு மண்டல ஐஜி, கோவை சரக டிஐஜி, கோவை எஸ்பி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர். வேல்முருகனை, வரவழைத்த முதல்வர் விஜய், சமயோசிதம் மற்றும் துணிச்சலுக்கு பாராட்டி, கவுரவித்தார். டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலும், பாராட்டி வாழ்த்தினார்.