மகன் அரசியல் வருகைக்காக உதயநிதியுடன் பழனிசாமி கூட்டணி?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்

மகன் அரசியல் வருகைக்காக உதயநிதியுடன் பழனிசாமி கூட்டணி?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்

தி.மு.க. வுடன் சேர்ந்து கொண்டு முதல்வர் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தற்போது, பழனிசாமியின் மகன் மிதுன்தான் அ.தி.மு.க.வை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருக்கிறார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’தி.மு.க. ஒரு கொள்கைக் கட்சி எனச் சொல்லிக் கொள்கிறது; ஆனால், தி.மு.க. எப்போதுமே கொள்கை ரீதியான பிரசாரத்தை உருவாக்கியது இல்லை. ஆபாச, அவதூறுப் பிரசாரத்தைத்தான் உருவாக்கி இருக்கிறார்கள். உதயநிதி ஆபாசப் பேச்சை மட்டுமே முன்னெடுக்கிறார். தி.மு.க.-வின் ஆபாசப் பேச்சுகளை மக்கள் தூக்கி எறிவார்கள்.

தற்போது இருக்கும் அ.தி.மு.க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது இல்லை. ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்தவர்கள் அ.தி.மு.க.வை விட்டு வெளியேறிவிட்டார்கள். பா.ம.க. இல்லை என்றால் அ.தி.மு.க. 47 தொகுதிகளில் வென்றிருக்க முடியாது. தி.மு.க.-வுடன் சேர்ந்து கொண்டு முதல்வர் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கிறார் பழனிசாமி.

எடப்பாடி தொகுதியில் எங்கள் வேட்பாளரை பழனிசாமி விலை கொடுத்து வாங்கி, அ.தி.மு.க.வில் இணைத்துள்ளார். இது குதிரை பேரம் இல்லையா? தற்போது அ.தி.மு.க.வில் இருவர் தான் இருக்கிறார்கள். ஒருவர் பழனிசாமி, மற்றொருவர் அவரது மகன் மிதுன்.

தற்போது, பழனிசாமியின் மகன் மிதுன்தான் அ.தி.மு.க.வை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வின் சொத்துகளை அபகரிக்க எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் திட்டமிட்டுள்ளார். மகனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்காக உதயநிதியுடன் கைகோத்திருக்கிறார் பழனிசாமி.

பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை மக்கள் புறக்கணித்துள்ளார்கள். தி.மு.க.வின் பிரசாரத்தை பழனிசாமி மேற்கொள்கிறார்; தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின். தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பழனிசாமி. இனிமேல், கொங்கு மண்டலத்தின் முகமாக முதல்வர் விஜய் இருப்பார்” என்றார்.