தமிழக்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கும் நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன. இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
2 நாள்களில் 9 கொலைகள் நடந்துள்ளன. இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் நடவடிக்கை எடுக்கும்படி உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜயை விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பட்டப்பகலில் இரட்டைக் கொலை.. 2 நாள்களில் 9 கொலைகள் – என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழகத்தில் அண்மைக் காலத்தில் கொலைகள் அதிகம் பதிவாகியிருப்பது குறித்து தகவல்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
உதயநிதி வெளியிட்ட பதிவில், பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாள்களில் 9 கொலைகள் – என்ன செய்கிறார் டம்மி முதல்வர்?
திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் – தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது.
குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.
இது தவிர, மயிலாடுதுறை – திருவண்ணாமலை – சேலம் – கன்னியாகுமரி – தேனி கூடலூர் என கடந்த 2 நாள்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன. இப்படி கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார்.
முதலமைச்சர்? இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.