Author: Senthil Kumar (Senthil Kumar)

Home Senthil Kumar
Post

சஞ்சு சாம்சனுக்கு சிறப்பு வீடியோ வெளியிட்டது சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தற்போது சஞ்சு சாம்சனுக்காக சிறப்பு வீடியோ வெளியிட்டு அவரை வரவேற்றுள்ளது. 19-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவ.15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த...

மயிலாடுதுறையில் ரூ.51 கோடி மதிப்பில் கடனுதவி:அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
Post

மயிலாடுதுறையில் ரூ.51 கோடி மதிப்பில் கடனுதவி:அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

மயிலாடுதுறையில் நடைபெற்ற 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் ரூ.51 கோடி மதிப்பிலான கடனுத்விகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கணபதி நகரில் நடைபெற்ற கூட்டுறவுத் துறையின் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 6850 பயனாளிகளுக்கு ரூ.51 கோடியே 31 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். மாவட்ட அட்சித் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டா பிற்படுத்தப்பட்டோர்...

திருவண்ணாமலையில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி சுயசேவை பிரிவு: அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
Post

திருவண்ணாமலையில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி சுயசேவை பிரிவு: அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

திருவண்ணாமலை வேங்கிக்காலில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி சுயசேவை பிரிவை அமைச்சர் எ.வ.வேலு நேற்று மாலை திறந்துவைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவையொட்டி வரும் 20ந்தேதிவரை ஒருவாரம் கூட்டுறவு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திருவண்ணாமலை வேங்கிக்காலில் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி சுயசேவை பிரிவு துவக்கிவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகிக்க மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன்...

Post

சேப்பாக்கம் மைதானம் புதுப்பிப்பு: வீடியோ வெளியிட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானம் முழுவதுமாக புதுபிக்கப்பட்ட வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் மினி ஏலம் டிச.15-ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்தல், கழற்றி விடுதல் மற்றும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றியுள்ளனர். இதனால் மினி ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிக்கு இடம் பெற உள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது....

Post

டெஃப்லிம்பிக்ஸில் தங்கம் வென்றார் அனுயா பிரசாத்

ஜப்பானில் நடைபெற்று வரும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்(டெஃப்லிம்பிக்ஸ்) போட்டியில் இந்தியாவை சேர்ந்த அனுயா பிரசாத் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஜப்பானில் நடைபெறும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில், துப்பாக்கி சுடுதலில் இந்தியர்கள் அசத்தி வருகின்றனர். போட்டியின் 2-ஆம் நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் அனுயா பிரசாத் 241.1 புள்ளிகளை எட்டி உலக சாதனையுடன் தங்கம் வென்றார். அதிலேயே பிரஞ்சலி பிரசாந்த் துமல் 236.8 புள்ளிகளுடன் வெள்ளியை தனதாக்கினார். ஈரானின் மஹ்லா சமீ வெண்கலப்...

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து, ஜெர்மனி தகுதி
Post

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து, ஜெர்மனி தகுதி

2026-ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி அணிகள் தகுதி பெற்றுள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். கண்டங்களின் அடிப்படையில் 43 அணிகள்...

டெல்லியில் எஸ்ஐஆருக்கு எதிராக பிரமாண்ட பேரணி: காங்கிரஸ் அறிவிப்பு
Post

டெல்லியில் எஸ்ஐஆருக்கு எதிராக பிரமாண்ட பேரணி: காங்கிரஸ் அறிவிப்பு

எஸ்ஐஆர்-க்கு எதிராக டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. பீகாரைத் தொடர்ந்து தமிழகம், கேரளம், உத்தரப் பிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட எஸ்ஐஆர் பணிகள், கடந்த நவ. 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த 12 மாநிலங்களிலும் இதுவரை 95 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக...

இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் & டி20 தொடர்கள் ஒத்திவைப்பு!
Post

இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் & டி20 தொடர்கள் ஒத்திவைப்பு!

இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச மகளிரணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் அடுத்த மாதம் விளையாடுவதாக இருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் கொல்கத்தா மற்றும் கட்டாக்கில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், இந்தியா வங்கதேசம் இடையேயான...

பீகாரில் ஆட்சியை தக்கவைக்கும் என்.டி.ஏ கூட்டணி: 200 தொகுதிக்கும் மேல் முன்னிலை
Post

பீகாரில் ஆட்சியை தக்கவைக்கும் என்.டி.ஏ கூட்டணி: 200 தொகுதிக்கும் மேல் முன்னிலை

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 200 தொகுதிக்கும் மேல் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 190 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்திருக்கிறது. இதன் மூலம் பாஜக மற்றும் ஜனதா தளம் இணைந்து பிகாரில் மீண்டும் ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகிறது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு, 122 தொகுதிகளில் பெரும்பான்மை பெற வேண்டிய...

டெல்லி குண்டுவெடிப்புக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை : அல் ஃபலா பல்கலைக்கழகம் அறிவிப்பு
Post

டெல்லி குண்டுவெடிப்புக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை : அல் ஃபலா பல்கலைக்கழகம் அறிவிப்பு

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அல் ஃபலா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் உள்துறை அமைச்சகத்தால் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு விசாரணைக் குழுவை என்ஐஏ இன்று நியமித்துள்ளது. குண்டுவெடிப்பை நிகழ்ந்திய உமர் முகமது நபி, டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவக் கல்லூரி...