பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு 100 சதவீதம் நானே பொறுப்பேற்கிறேன் என்று ஜன்சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன்சுராஜ் கட்சி, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேலும், 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.இந்த நிலையில், தேர்தல் தோல்விக்கு 100 சதவீத பொறுப்பையும் தானே ஏற்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பாட்னாவில் நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர்...
Category: இந்தியா
குடும்ப பிரச்சனையை நான் தீர்த்துக் கொள்வேன்: கட்சியினருக்கு அறிவுறுத்திய லாலு பிரசாத் யாதவ்
குடும்ப பிரச்னையை வீட்டுக்குள் நான் தீர்த்துவிடுவேன், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர்களுக்கு லாலு பிரசாத் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாட்னாவில் உள்ள தன்னுடைய இல்லத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பீகார் தேர்தலில் போட்டியிட்டவர்களை நேரில் அழைத்துப் பேசியிருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். இந்தக் கூட்டத்தில், லாலு பிரசாத் யாதவ், மனைவி ராஃப்ரி தேவி மற்றும்...
மயிலாடுதுறையில் ரூ.51 கோடி மதிப்பில் கடனுதவி:அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
மயிலாடுதுறையில் நடைபெற்ற 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் ரூ.51 கோடி மதிப்பிலான கடனுத்விகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கணபதி நகரில் நடைபெற்ற கூட்டுறவுத் துறையின் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 6850 பயனாளிகளுக்கு ரூ.51 கோடியே 31 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். மாவட்ட அட்சித் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டா பிற்படுத்தப்பட்டோர்...
கோவை, மதுரை மெட்ரோ ரயில் சேவையை நிராகரித்த மத்திய அரசு; குறைவான மக்கள் தொகை காரணம் என தகவல்
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகையை காரணம் காட்டி திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களுக்கு மெட்ரோ திட்டம் என மத்திய அரசு தெரிவிக்கிறது. இரண்டு மாநகர் பகுதிகளிலும் 20 லட்சத்திற்கும்...
டெல்லியில் எஸ்ஐஆருக்கு எதிராக பிரமாண்ட பேரணி: காங்கிரஸ் அறிவிப்பு
எஸ்ஐஆர்-க்கு எதிராக டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. பீகாரைத் தொடர்ந்து தமிழகம், கேரளம், உத்தரப் பிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் இரண்டாம் கட்ட எஸ்ஐஆர் பணிகள், கடந்த நவ. 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த 12 மாநிலங்களிலும் இதுவரை 95 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாக...
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல்
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும்...
உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு போர்ச்சுகல் தகுதி
லிஸ்பன்,23-வது ‘பிபா’ உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 48 அணிகளில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். கண்டங்கள் வாரியாக பல்வேறு நாடுகளில் நடக்கும் தகுதி சுற்று இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இந்நிலையில், உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியில் இன்று அர்மீனியா – போர்ச்சுகல் மோதின. இதில் 9-1...
பீகாரில் ஆட்சியை தக்கவைக்கும் என்.டி.ஏ கூட்டணி: 200 தொகுதிக்கும் மேல் முன்னிலை
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 200 தொகுதிக்கும் மேல் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 190 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்திருக்கிறது. இதன் மூலம் பாஜக மற்றும் ஜனதா தளம் இணைந்து பிகாரில் மீண்டும் ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகிறது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு, 122 தொகுதிகளில் பெரும்பான்மை பெற வேண்டிய...
டெல்லி குண்டுவெடிப்புக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை : அல் ஃபலா பல்கலைக்கழகம் அறிவிப்பு
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அல் ஃபலா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் உள்துறை அமைச்சகத்தால் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு விசாரணைக் குழுவை என்ஐஏ இன்று நியமித்துள்ளது. குண்டுவெடிப்பை நிகழ்ந்திய உமர் முகமது நபி, டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவக் கல்லூரி...
சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக, தமிழகம் மாறியிருக்கிறது: அண்ணாமலை கண்டனம்
சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக, தமிழகம் மாறியிருக்கிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் ஊரில் உள்ள, பிரசித்தி பெற்ற, பஞ்சபூத சிவ தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும். அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில், இரவு நேரக் காவலாளிகளான பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோர். வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.இந்து...






