வெள்ளை மாளிகைக்குள் நுழைய மூன்று செய்தி நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனங்கள் டிரம்ப் தொடர்பான செய்தி ஒளிபரப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. நேர்மையற்ற முறையில் பொய்யான செய்திகளை வெளியிடுவதாகக் குற்றம்சாட்டி, சிஎன்என், பொலிடிகோ மற்றும் எம்எஸ் நவ் ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். தொடர்ந்து, சனிக்கிழமை முதல் வெள்ளை மாளிகைக்குள்...
