மயிலாடுதுறையில் புதிய எண்ணெய் கிணறுகள் தோண்ட ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஒன்றிய அரசு அனுமதி வழங்குவதை மாநில அரசு தடுத்திட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மயிலாடுதுறை கடற்கரையிலிருந்து கடலுக்குள் சுமார் 81 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள பிஒய்-3 எண்ணெய் வயலில் ஐந்து புதிய எண்ணெய் கிணறுகளைத் தோண்டுவதற்காக, தனியார் நிறுவனமான ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அன்ட் புரொடக்ஷன் ஒன்றிய அரசின்...
