சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. காலை முதலே வெய்யில் வாட்டி வதைத்துவந்த நிலையில், மாலையில் மழை பெய்தது.

சென்னை பட்டினப்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர், மந்தவெளி எழும்பூர், சென்ட்ரல், சேத்பட், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கும், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி, வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், மதுரவாயல், பூவிருந்தவல்லி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று இரவு மிதமான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகரில் திடீர் மழை பெய்து வருகிறது.