Tag: Cricket

Home Cricket
Post

ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைப்போம்: இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைப்போம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்  நாளை(நவ.21) பெர்த் நகரில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை வென்று சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி களம் இறங்கியுள்ளது. கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் 2010- 11-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசஸ் கோப்பையை தான் இங்கிலாந்து அணி வென்றது. அதன்...

Post

2-ஆவது டெஸ்டில் சுப்மன் கில் விலகல்: கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்

கழுத்து வலி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கேப்டன் சுப்மன் கில், கவுஹாத்தியில் நடைபெறவுள்ள 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, துணை கேப்டன் ரிஷப் பண்ட் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். மேலும், ஆடும் லெவனில் கில்லின் இடத்திற்கு இளம் வீரர் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது, முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்கையில் இந்திய...

Post

100-ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து சாதனை படைத்தார் முஷ்பிகுர் ரஹீம்

அயர்லாந்து அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம். அயர்லாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் போட்டி இன்று (நவ.20) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி...

Post

சஞ்சு சாம்சனுக்கு சிறப்பு வீடியோ வெளியிட்டது சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தற்போது சஞ்சு சாம்சனுக்காக சிறப்பு வீடியோ வெளியிட்டு அவரை வரவேற்றுள்ளது. 19-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவ.15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த...

Post

சேப்பாக்கம் மைதானம் புதுப்பிப்பு: வீடியோ வெளியிட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

சென்னை சேப்பாக்கம் மைதானம் முழுவதுமாக புதுபிக்கப்பட்ட வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் மினி ஏலம் டிச.15-ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்தல், கழற்றி விடுதல் மற்றும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றியுள்ளனர். இதனால் மினி ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிக்கு இடம் பெற உள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது....

இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் & டி20 தொடர்கள் ஒத்திவைப்பு!
Post

இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் & டி20 தொடர்கள் ஒத்திவைப்பு!

இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச மகளிரணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் அடுத்த மாதம் விளையாடுவதாக இருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் கொல்கத்தா மற்றும் கட்டாக்கில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், இந்தியா வங்கதேசம் இடையேயான...