சென்னையில் இன்று (ஆகஸ்ட் 31) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,080 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து 14,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) தங்கம் விலை கிராமுக்கு 295 ரூபாய் குறைந்து, 14,505 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 2,360 ரூபாய் சரிவடைந்து, 1,16,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 260 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 31) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,080 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து 14,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
