திமுக சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் இ. பரந்தாமன், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் சுகன்யா ஆகியோர் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதேபோல், தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்களாக தவெக துணைப் பொதுச் செயலாளர் கே. மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலர் பி. சத்தியபாமா தாராபுரத்திலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை,...
