தவெக அரசு செயலிழந்த அரசாங்கமாகவே இருக்கிறது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் சீண்டல்கள், போதைக் குற்றங்கள் இந்த ஆட்சியில் பலமடங்கு அதிகரித்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், ’’தமிழக சட்டப்பேரவையில் தினந்தோறும் ஏதேனும் பிரச்னை ஏற்படுகிறது. நிதிநிலை அறிக்கை, விவாதத்திலும் பிரச்னை. மானியக் கோரிக்கையிலும் பிரச்னை. அதனால் மக்கள் பிரச்னைகளை அவையில் முழுமையாகப் பேச...
Category: தமிழகம்
சாதியின் பெயரை கேட்காமல் பட்டியலில் இருந்து தேர்வு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும்: அன்புமணி
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, மக்களிடம் சாதியின் பெயரை கேட்டு பதிவு செய்யும் நடைமுறையை கைவிட்டு, மத்திய, மாநில அரசுகளின் ஓபிசி சாதிகள் பட்டியலை கணக்கெடுப்புக்கான செயலியில் இணைத்து, அதிலிருந்து சாதியின் பெயர் மற்றும் எண்ணை தேர்வு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓபிசி மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக மத்திய, மாநில அரசுகளின் ஓபிசி பட்டியல்களை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ததாகவும்,...
அசன் மவுலானா 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்குத் தடை விதித்து இந்தியத் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அசன் மவுலானா போட்டியிட்டார். அப்போது, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இதுசம்பந்தமாக 10 நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இந்த விளம்பரங்களுக்கான செலவுத்தொகை 33 லட்சம் ரூபாயை செலவுக்கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, 2021-ம் ஆண்டு...
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவரது சகோதரர் வீடுகளில் சோதனை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், ஆர்.ஏ.புரம் மற்றும் திருச்சியில் பல்வேறு இடங்கள் என மொத்தம் 19 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி...
அமைச்சர்களின் உறுதியால் தூய்மைபணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
தூய்மைப் பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, சென்னையில் 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகப்பேறு மற்றும் மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும், கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு...
நாளை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்...
”தளபதிக்கு நன்றி சொன்ன தல”
தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகரும், ரேஸருமான அஜித் குமார் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் குமார் சினிமாவில் நடிப்பதுடன் தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அவரது ரேஸிங் குழு சில பந்தயங்களில் முதல் 3 இடங்களைப் பிடித்து சாதித்துள்ளது. பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்த ஆண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது அஜித்துக்கு...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. காலை முதலே வெய்யில் வாட்டி வதைத்துவந்த நிலையில், மாலையில் மழை பெய்தது. சென்னை பட்டினப்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர், மந்தவெளி எழும்பூர், சென்ட்ரல், சேத்பட், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கும், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி, வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், மதுரவாயல், பூவிருந்தவல்லி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது....
சென்னையில்ரூ.1200 கோடிமதிப்பீட்டில் புதிய தலைமை செயலகம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னையில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று (செப்.3) காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் விதி எண் 110-ன் கீழ், முதல்வர் விஜய் பல்வேறு திட்டங்களை அறித்தார். அதில், சென்னையில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய...
குழந்தைகளுக்கே தீண்டாமைக் கொடுமையா? கனிமொழி எம்.பி. ஆவேசம்
கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்தும் அளவுக்கு, சாதி என்னும் மனநோயால் இச்சமூகம் இன்னும் பாதிக்கப்பட்டிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம’ என்று திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’புதுக்கோட்டை அருகே பள்ளி செல்லும் பழங்குடியின மாணவிகள், அரசு பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு, படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, நடத்துநரும் ஓட்டுநரும் மாணவிகளை பேருந்திலிருந்து இறக்கிவிட முயன்றதும், மறுத்த மாணவிகளை...









