தமிழ்நாட்டில் மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இரட்டைக் கொலை சம்பவங்கள் உள்பட பல குற்றங்கள் அரங்கேறியிப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கட்டணம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள்...
Category: மாவட்ட செய்திகள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தாராபுரத்தில் 22 பேர், மதுராந்தகத்தில் 27 பேர் களம் காண்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்களாக த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர்...
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்: 12 கோபுரங்களின் கலசங்களுக்கு புனித நீராட்டு
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நேற்று (17-ந்தேதி) காலை கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் ஓதுவார்களின் வேத மந்திரங்கள், மேளதாள வாத்தியங்கள் முழங்க, கோயிலின் 12 கோபுரங்களில் உள்ள கலசங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களுள் ஒன்றாகவும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை: அமைச்சர் நிர்மல் குமார்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பின்பு நாளை (செப்.17) காலை 7.40 முதல் 8.10 மணியளவில் நடைபெறுகிறது. இதனையொட்டி அமைச்சர்கள் நிர்மல் குமார், ரமேஷ் இன்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் நிர்மல் குமார் பதிலளிக்கையில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதனால் 5 முனைப் போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து, தாராபுரம் தொகுதியில் கட்சி...
முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
பெரியார் மற்றும் அண்ணா பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, முதல்வர் விஜய்க்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் தந்தை பெரியார் பேரணிக்கும், குடியாத்தத்தில் அண்ணா பேரணிக்கும், இந்த Circus அரசின் போலீஸ் அனுமதி மறுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன் என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் விஜய், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்..? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூக...
தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
மறைந்த பேராசிரியரும், தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையாவின் உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, தனது 90வது வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். மதுரை ஞானஒளிவுபுரம் விசுவாசபுரியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த அவரது உடலுக்கு தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், திரளானோர் அஞ்சலி...
காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் மின்சாரம் தட்டுப்பாடு: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
தமிழகத்தில் கோடை காலங்களில் பொதுவாக மின் தேவை அதிகரிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி, தமிழகத்தின் மின் தேவை இதுவரை இல்லாத அளவிற்கு 21,211 மெகாவாட் வரை அதிகரித்தது. கோடை காலத்திற்கு பிறகு ஜூலையில் இருந்து வெயில் குறையும்போது, மின் தேவையும் படிப்படியாக குறையும். ஆனால், இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் முதல் முறையாக ஜூலை 14-ந்தேதி தமிழகத்தின் மின்தேவை, 21,724 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை...
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்: பொதுநல வழக்கு
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உரிய நடைமுறையை வகுக்கவும், 7 தொகுதிகளின் இடைத்தேர்தல் செலவுகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்எல்ஏக்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியில் இணைந்தனர். இதில்...
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தவெக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அறிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலிலும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே 4 முனைப்போட்டி...









