நேபாள பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டு திபெத்தில் சிக்கிய 39 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது திபெத்தில் சிக்கிய 39 தமிழர்கள் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலா மற்றும் கைலாஷ் யாத்திரைக்காக நேபாளம் சென்ற 103 பேரில், முதற்கட்டமாக 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு ஏற்கெனவே தமிழகம் திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திபெத்தில் சிக்கியுள்ள மேலும்...
டி.என்.பி.எல். 2026 சாம்பியன் கோவை கிங்ஸ்! மதுரை பாந்தர்ஸை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2026 தொடரின் இறுதிப்போட்டியில் விடா கோவை கிங்ஸ் அணி, சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி தனது மூன்றாவது TNPL கோப்பையை வென்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. கோவை அணியின் ஆன்ட்ரே...
அதிகாரிகள் ரூ.2.88 கோடி ‘வசூல்’: கலெக்டர் முன் விவசாயிகள் தர்ணா
தஞ்சாவூர்: வண்டல் மண் எடுக்க, நீர்வளத்துறை, வருவாய் துறை அதிகாரிகள், 2.88 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றுள்ளதாக கூறி, விவசாயிகள், கலெக்டர் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ரேவதி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, ஒரத்தநாடு வட்டாரத்தில் வண்டல் மண் எடுக்க, 30 யூனிட் அளவுக்கு விவசாயிகளிடம் இருந்து, நீர்வளத்துறை அதிகாரிகள், 10,000 ரூபாய், தாசில்தார் 10,000 ரூபாய் என, லஞ்சம் கேட்கின்றனர். இது தொடர்பாக போலீசில்...
விரைவு பஸ்கள் தவிர அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு இலவச பயணம்?
சென்னை: எஸ்.இ.டி.சி., எனப்படும், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் தவிர, மற்ற அனைத்து அரசு பஸ்களிலும், மகளிர் இலவச பயண திட்டத்தை செயல்படுத்த, போக்குவரத்துக் கழகங்கள் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: மகளிர் இலவச பயண திட்டத்தின்படி, சென்னையில், சாதாரண, சொகுசு கட்டணத்தில் இயக்கப்படும் 3,633 பஸ்களிலும், மாவட்டங்களில் டவுன் மற்றும் சாதாரண கட்டண பஸ்கள் உட்பட, 9,000க்கும் மேற்பட்ட பஸ்களிலும் பயணம் செய்யலாம். இதற்கான வழிகாட்டு முறைகளை தமிழக அரசு...
வார்டு மேம்பாட்டு நிதி கேட்டு வரிந்துகட்டிய கவுன்சிலர்கள்; மாநகராட்சி கூட்டத்திற்கு கருப்பு உடையில் வந்த மேயர்
சென்னை: கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி, ஒப்பந்ததாரர்களுக்கு நிதி விடுவிக்காததை கண்டித்து, தி.மு.க., மேயர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து, மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்றனர். இது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு, அ.தி.மு.க., – பா.ஜ., காங்கிரஸ், வி.சி.க., உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. சென்னை மாநகராட்சி கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, தி.மு.க., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அக்கட்சி கவுன்சிலர்கள், கருப்பு உடை அணிந்து...
ரூ.6,000 லஞ்சம் வாங்கிய குடிநீர் வாரிய அதிகாரி கைது
மாதவரம்: குடிநீர் இணைப்பு வழங்க, 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குடிநீர் வாரிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 29வது வார்டு, தணிகாச்சலம் நகரைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 46. இவர், தன் புது வீட்டிற்கு, குடிநீர் இணைப்புக்கோரி, குடிநீர் வாரிய உதவி பொறியாளர் முருகேசனை அணுகியுள்ளார். இணைப்பு வழங்க, முருகேசன், 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த ஜெயகுமார், லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய...
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்தில் அன்னதானம்: உணவுப்பாதுகாப்புத்துறை சான்றிதழ் கட்டாயம்
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப். 17 ல் நடக்கஉள்ள நிலையில், பக்தர்களுக்காக அன்னதானம், நீர்மோர், பிற உணவுப்பொருட்களை வழங்குவோர் ஆன்லைனில் பதிவுச்சான்றிதழ் பெற வேண்டும் என உணவுப்பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் அன்னதானம், பிரசாதங்கள் தயாரித்து வழங்குவதற்கான பிரத்யேக ‘போக்’ சான்றிதழை மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வழங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கான ‘போக்’ சான்றிதழ் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. யாகசாலை, கும்பாபிஷேகத்தின் போது மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள், ஆவணி மூலவீதிகள், மாரட்...
வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்கா வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா இப்போது வெனிசுலா நாட்டுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. எனது உத்தரவின் பேரில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோர், வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் மற்றும் தனியார் வணிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டனர். இதன் மூலம்,...
பட்டதாரி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு: 2 அதிகாரிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
திருச்சி: பட்டதாரி ஆசிரியரிடம், 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றிய சந்திர சேகரன், 65, தேவதாஸ், 61, ஆகிய இருவருக்கும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, பாலகிருஷ்ணன்பட்டி அரசு ஆதிதிராவிடர் உயர் நிலைப்பள்ளியில் பட்ட தாரி ஆசிரியராக பணி யாற்றியவர் கண்ணன். இவர் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்யாமல் இருக்க, திருச்சி மாவட்ட ஆதி திராவிடர்...
நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் இதுவரை 84 பேர் மீட்பு; 320 பேர் மாயம்
புதுடில்லி: நேபாள வெள்ளத்தில் மாயமாகி இருக்கும் இந்தியர்கள் 320 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், கடந்த 26ம் தேதி, அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியுள்ள இந்த பெரும் துயரத்தில், தமிழகத்தில் இருந்து ஆன்மிக யாத்திரை சென்ற 100 பேர் உட்பட,...









