திருநெல்வேலி: திருநெல்வேலியில் காயிதே மில்லத் பெயரில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட நூலகம் அமைய இருப்பதாகவும், அதற்கான அடிக்கலை இன்றைக்கு நாட்டியிருப்பதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் ஆற்றிய...
Category: இந்தியா
அமித் ஷா முதல் விஜய் வரை.. எந்த மிரட்டலையும் எதிர்கொள்ள கருப்பு சிவப்பு படை தயாராக உள்ளது!
திருவண்ணாமலை: “பிஹாரில் வென்றுவிட்டோம் அடுத்த இலக்கு தமிழ்நாடு என்கிறார் அமித் ஷா. இதுபோன்ற எந்த மிரட்டலையும் எதிர்கொள்ள கருப்பு சிவப்பு படை தயாராக உள்ளது” என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருவண்ணாமலையில் இன்று வடக்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு திமுக இளைஞரணி தலைவரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இம்மாநாட்டில் திருவண்ணாமலை,...
கேரளா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி: தலைநகரத்தை பாஜக கைப்பற்றியது
கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள...
நாளை மாரத்தான் போட்டி- மெட்ரோ ரெயில் இயக்கம்!
சென்னை: இந்திய கடற்படையை போற்றும் விதமாக கடற்படை சார்பில் சென்னை நேப்பியர் பாலம் அருகே முதன்முறையாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாளை அதிகாலை 4.45 மணி தொடங்கி 6.30 மணி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், மாரத்தானில் பங்கேற்பவர்களின் வசதிக்காக நாளைய தினம் அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது அதே வேளையில், எம்.ஜி.ஆர். சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம்...
கதவை உடைத்து சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார்!
தயாரிப்பு நிறுவனத்தை மிரட்டி பணம் பறித்தாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்; சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் இல்லத்தை இன்று அதிகாலை முதல் போலீசார் சுற்றிவளைத்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் தொடர்பான ஒரு வழக்கு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து அவருக்கு சமன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, “ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில்...
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக காப்பீட்டு சட்டங்கள் (திருத்த) மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை 74 சதவீதம் என்ற அளவில் அந்நிய நேரடி...
“திருப்பரங்குன்றம் தீப பிரச்சினை இந்துக்களுக்கு சாதகமாக தீர்க்கப்பட வேண்டும்” – மோகன் பாகவத்
திருச்சி: ‘‘திருப்பரங்குன்றம் பிரச்சினை இந்துக்களுக்கு சாதகமாகத் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு என்ன தேவையோ, அதை நாங்கள் செய்வோம்’’ என்று ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் மோகன் பாகவத் தெரிவித்தார். திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கல்வியாளர்கள், பிரபலங்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோரை ஆர்எஸ்எஸ் தேசியத் தலைவர் மோகன் பாகவத் நேரில் சந்தித்து கலந்துரையாடினார் அப்போது ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகியும், பாஜக மூத்த தலைவருமான ஹெச்.ராஜா, “திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழகத்தில்...
2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தலுக்கு முன்பாக, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், நாங்கள
அமெரிக்காவுக்கான ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 3 மடங்கு உயர்வு
உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அறிதிறன் பேசிகளின் (ஸ்மார்ட் போன்) மதிப்பு கடந்த அக்டோபரில் 3 மடங்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த அக்டோபரில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 147 கோடி டாலர் மதிப்பிலான அறிதிறன் பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது சுமார் மூன்று மடங்காகும். அப்போது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அறிதிறன் பேசிகளின் மதிப்பு 46 கோடி...
திருவண்ணாமலையில் அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய நடிகர் தாமு
திருவண்ணாமலையில் ஐமேத் அபாகஸ் சார்பில் அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நடிகர் தாமு பரிசுகளை வழங்கினார். திருவண்ணாமலை உள்பட 15 இடங்களில் இயங்கி வரும் ஐமேத் எனும் நிறுவனம் மாணவ-மாணவியர்களின் கணித திறனை மிக குறுகிய காலத்தில் மேம்படுத்திடும் வண்ணம் அபாகஸ் வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகிறது. இந்நிறுவனம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சாவூர், காரைக்கால் மற்றும் திருவண்ணாமலை உள்பட 15 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட 8-வது மாவட்ட அளவிலான...







