டம்மி முதல்வரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். ராமநாதபுரம், சிவகங்கையில் இரட்டைக் கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யாமல் போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது எனவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ” “Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. இராமநாதபுரம்...
Tag: #CM
சென்னையில் திறன் மையம் அமைக்கும் வால்கிரீன்ஸ் நிறுவனம்: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட தரமணி வளாகத்தில் 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் உலகளாவிய திறன் மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’முதல்வர் விஜய் முன்னிலையில் (செப்.18) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக அரசால்...
லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.12,300 கோடிக்கு 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres – GCCs) விரிவுபடுத்தவும், புதிய மையங்களை நிறுவவும் ரூ.12,300 கோடி முதலீட்டில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) விரிவுபடுத்துவதற்கும், புதிதாக நிறுவுவதற்கும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்காக,...
அஜித்துக்கு மினியேச்சர் கார் பரிசளித்த விஜய் விஜய்க்கு தலைக்கவசம் பரிசளித்த அஜித்
நடிகரும் கார் ரேசருமான அஜித்துக்கு மினியேச்சர் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் தமிழக முதல்வர் விஜய். அதற்கு பதிலாக, முதல்வர் விஜய்க்கு தலைக்கவசம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் நடிகர் அஜித் குமார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ளார். கடந்த 10-ந் தேதி இரவு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்ற அவர் மறுநாள் லண்டன் சென்றடைந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தய தொடக்க நிகழ்ச்சியும்...
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் புறப்பட்டார்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்குத் தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, தவெக ஆட்சிக்கு வந்தது முதல் 100 நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 லட்சத்து 2,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சத்து 21,788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு...
சட்டமன்றத்திலும் முதல்வர் விஜய் நடிக்கிறார்: பரந்தாமன் விமர்சனம்
திரைப்படத்தில் நடிப்பதுபோலவே இப்போது சட்டமன்றத்தில் நடிக்கிறார் விஜய் என பரந்தாமன் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘’சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதில் சொல்வதே மரபு. 13 சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிக்கவில்லை. எத்தனை ரீல்ஸ் போடலாம் என்பதை மையமாக வைத்தே முதல்வரின் பதில் இருந்தது. எதிர்க்கட்சித் தலைவரின் 15 கேள்விகளுக்கு முதல்வர் பதில் தரவில்லை. தவெக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து...
சட்டப்பேரவைத் தலைவர் சர்வாதிகார போக்கைகடைபிடிக்கிறார்:திமுக கொறடா எ.வ.வேலு குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையாக இருப்பது போல் இருந்துவிட்டு இரண்டு முறை சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறார் என்று திமுக கொறடா எ.வ.வேலு குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை பதிலுரை அளிக்கும்போது, திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா குறித்து ஆவேசமாக பேசியிருந்தார். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பளிக்காததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். நேற்று சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின்போது,...
தவெக அரசு செயலிழந்த அரசாங்கமாகவே உள்ளது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தவெக அரசு செயலிழந்த அரசாங்கமாகவே இருக்கிறது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் சீண்டல்கள், போதைக் குற்றங்கள் இந்த ஆட்சியில் பலமடங்கு அதிகரித்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், ’’தமிழக சட்டப்பேரவையில் தினந்தோறும் ஏதேனும் பிரச்னை ஏற்படுகிறது. நிதிநிலை அறிக்கை, விவாதத்திலும் பிரச்னை. மானியக் கோரிக்கையிலும் பிரச்னை. அதனால் மக்கள் பிரச்னைகளை அவையில் முழுமையாகப் பேச...







