Category: அரசியல்

Home அரசியல்
பாட்டிக்கு கூலிங்கிளாஸ் பரிசளித்த முதல்வர் விஜய்
Post

பாட்டிக்கு கூலிங்கிளாஸ் பரிசளித்த முதல்வர் விஜய்

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய், அங்கிருந்து சேலம் திரும்பும் வழியில், சின்னக்காவூர் பகுதியில் விவசாயி ஒருவருடைய வீட்டுக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் உரையாடினார். முதல்வர் விஜய் வருகையால் அப்பகுதியே பெரும் பரபரப்பை அடைந்தது. முதல்வரை வரவேற்ற விவசாய குடும்பத்தினருக்கு, விஜய் பட்டு வேட்டி, சேலைகளை வழங்கினார். எந்தவிதமான விவசாயம் செய்கிறீர்கள், எவ்வாறு வருவாய் ஈட்டுகிறீர்கள் என்பது குறித்து விவசாய குடும்பத்தாரிடம் விஜய் கேட்டுள்ளார். அதற்கு, வீட்டுக்கு பின்னால் வாழை மரங்கள் நட்டு வளர்த்து வருகிறோம், அது...

வாக்குத் திருட்டு ஆணையத்தின் ஒரே நோக்கம் பாஜக வெற்றி பெற வேண்டும்: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
Post

வாக்குத் திருட்டு ஆணையத்தின் ஒரே நோக்கம் பாஜக வெற்றி பெற வேண்டும்: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு

வாக்குத் திருட்டு ஆணையத்தின் ஒரே நோக்கம் எப்படியாவது பாஜக வெற்றிபெற வேண்டும் என்பதும், நாட்டின் ஜனநாயகம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுமே என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாஜகவும், அந்த வாக்கு திருட்டு ஆணையமும் தங்கள் உத்திகளை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இனியும் அவ்வாறே செய்வார்கள். அவர்களின் நோக்கம் இதுதான். எப்படியாவது பாஜக வெற்றிபெற வேண்டும், அதோடு, இந்தியாவின்...

நேபாளத்தில் சிக்கிய 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்
Post

நேபாளத்தில் சிக்கிய 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

நேபாளத்தில் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ள 84 தமிழர்களையும் மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் மீட்பு பணிகள் குறித்து, பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் பேசியதாவது, நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிக்கிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்க முதல்வர் உத்தரவிட்டார். டெல்லியில்...

செப்.5 சிஜேபி பேரணிக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்
Post

செப்.5 சிஜேபி பேரணிக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்

டெல்லியில் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(சிஜேபி) நடத்தும் பேரணிக்கு தடை விதிக்கக் கோரிய மனுவின் மீது, அவசர உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது. டெல்லியில் ஜந்தர் – மந்தரில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி நடத்திய போராட்டத்தை கைவிடக் கோரிய மத்திய அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு மாதமாகியும் வழக்குகளை டெல்லி காவல்துறை...

அதிகாரிகள் ரூ.2.88 கோடி ‘வசூல்’: கலெக்டர் முன் விவசாயிகள் தர்ணா
Post

அதிகாரிகள் ரூ.2.88 கோடி ‘வசூல்’: கலெக்டர் முன் விவசாயிகள் தர்ணா

தஞ்சாவூர்: வண்டல் மண் எடுக்க, நீர்வளத்துறை, வருவாய் துறை அதிகாரிகள், 2.88 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றுள்ளதாக கூறி, விவசாயிகள், கலெக்டர் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ரேவதி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, ஒரத்தநாடு வட்டாரத்தில் வண்டல் மண் எடுக்க, 30 யூனிட் அளவுக்கு விவசாயிகளிடம் இருந்து, நீர்வளத்துறை அதிகாரிகள், 10,000 ரூபாய், தாசில்தார் 10,000 ரூபாய் என, லஞ்சம் கேட்கின்றனர். இது தொடர்பாக போலீசில்...

வார்டு மேம்பாட்டு நிதி கேட்டு வரிந்துகட்டிய கவுன்சிலர்கள்; மாநகராட்சி கூட்டத்திற்கு கருப்பு உடையில் வந்த மேயர்
Post

வார்டு மேம்பாட்டு நிதி கேட்டு வரிந்துகட்டிய கவுன்சிலர்கள்; மாநகராட்சி கூட்டத்திற்கு கருப்பு உடையில் வந்த மேயர்

சென்னை: கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி, ஒப்பந்ததாரர்களுக்கு நிதி விடுவிக்காததை கண்டித்து, தி.மு.க., மேயர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து, மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்றனர். இது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு, அ.தி.மு.க., – பா.ஜ., காங்கிரஸ், வி.சி.க., உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. சென்னை மாநகராட்சி கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, தி.மு.க., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அக்கட்சி கவுன்சிலர்கள், கருப்பு உடை அணிந்து...

ரூ.6,000 லஞ்சம் வாங்கிய குடிநீர் வாரிய அதிகாரி கைது
Post

ரூ.6,000 லஞ்சம் வாங்கிய குடிநீர் வாரிய அதிகாரி கைது

மாதவரம்: குடிநீர் இணைப்பு வழங்க, 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குடிநீர் வாரிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 29வது வார்டு, தணிகாச்சலம் நகரைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 46. இவர், தன் புது வீட்டிற்கு, குடிநீர் இணைப்புக்கோரி, குடிநீர் வாரிய உதவி பொறியாளர் முருகேசனை அணுகியுள்ளார். இணைப்பு வழங்க, முருகேசன், 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த ஜெயகுமார், லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய...

மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்தில் அன்னதானம்: உணவுப்பாதுகாப்புத்துறை சான்றிதழ் கட்டாயம்
Post

மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்தில் அன்னதானம்: உணவுப்பாதுகாப்புத்துறை சான்றிதழ் கட்டாயம்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப். 17 ல் நடக்கஉள்ள நிலையில், பக்தர்களுக்காக அன்னதானம், நீர்மோர், பிற உணவுப்பொருட்களை வழங்குவோர் ஆன்லைனில் பதிவுச்சான்றிதழ் பெற வேண்டும் என உணவுப்பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் அன்னதானம், பிரசாதங்கள் தயாரித்து வழங்குவதற்கான பிரத்யேக ‘போக்’ சான்றிதழை மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வழங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கான ‘போக்’ சான்றிதழ் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. யாகசாலை, கும்பாபிஷேகத்தின் போது மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள், ஆவணி மூலவீதிகள், மாரட்...

வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
Post

வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா இப்போது வெனிசுலா நாட்டுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. எனது உத்தரவின் பேரில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோர், வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் மற்றும் தனியார் வணிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டனர். இதன் மூலம்,...

பட்டதாரி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு: 2 அதிகாரிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
Post

பட்டதாரி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு: 2 அதிகாரிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சி: பட்டதாரி ஆசிரியரிடம், 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றிய சந்திர சேகரன், 65, தேவதாஸ், 61, ஆகிய இருவருக்கும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, பாலகிருஷ்ணன்பட்டி அரசு ஆதிதிராவிடர் உயர் நிலைப்பள்ளியில் பட்ட தாரி ஆசிரியராக பணி யாற்றியவர் கண்ணன். இவர் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்யாமல் இருக்க, திருச்சி மாவட்ட ஆதி திராவிடர்...