புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா (செப்.11) காலமானார். மதுரையைச் சேர்ந்தவர் தமிழறிஞர், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா. இவர், அரசரடி பகுதியிலுள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். இந்த நிலையில் சாலமன் பாப்பையா வயது முதிர்வு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவு தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியாக சாலமன் பாப்பையா பணிபுரிந்தவர். அதுமட்டுமல்லாமல், தொலைக்காட்சி...
முக்கியச் செய்திகள்

இந்தியா தலைமையில்தொடங்குகிறது பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்கள் பங்கேற்பு
புதுடெல்லியில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்க உள்ளார். மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் நாளை மறுத்தினம் தொடங்குகின்றன. இதில் பிரிக்ஸ் அமைப்பின் 11 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பிரிக்ஸ் கூட்டணி நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பு நாடுகளின் தலைவர்கள் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா தலைமை...

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் புறப்பட்டார்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்குத் தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, தவெக ஆட்சிக்கு வந்தது முதல் 100 நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 லட்சத்து 2,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு லட்சத்து 21,788 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டனுக்கு நேற்று புறப்பட்டார். இதற்காக நேற்று இரவு...

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
திமுக சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் இ. பரந்தாமன், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் சுகன்யா ஆகியோர் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதேபோல், தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்களாக தவெக துணைப் பொதுச் செயலாளர் கே. மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலர் பி. சத்தியபாமா தாராபுரத்திலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை, அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே....

3 மணி நேரம் போராட்டம்: வில்லியம்ஸ் சகோதரிகள் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், வீனஸ் வில்லியம்ஸ்–செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் இணைந்து இரட்டையர் பிரிவில் களம் இறங்கினர். 2022-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆர்தர் ஆஷ் மைதானத்தில் இணைந்து விளையாடிய அவர்கள், பரபரப்பான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தனர். முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயின்ட்–சீன தைபேயின் ஹாவ்-சிங் சான் ஜோடியை எதிர்கொண்ட வில்லியம்ஸ் சகோதரிகள், முதல் செட்டை 3-6 என இழந்தனர். 2-வது செட்டில் கடுமையாகப் போராடி 7-6 (8-6) என கைப்பற்றி ஆட்டத்தை சமன் செய்தனர். இதையடுத்து நடைபெற்ற 3-வது செட் மற்றும்...

குர்பாஸ் அதிரடி: ஜமைக்காவை வீழ்த்தி கயானா அபார வெற்றி
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜமைக்காவை வீழ்த்தி கயானா அபார வெற்றி பெற்றது. 14-வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக்...

அமெரிக்க ஓபனில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி: 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சுற்றிலேயே வெளியேற்றம்
நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதன் மூலம் அவர் இந்த தொடரிலிருந்து முதல் சுற்றோடு வெளியேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவின் மரியானோ நவோனுக்கு எதிராக ஜோகோவிச் களம் கண்டார். இதில் 7-6 (7/5), 5-7, 4-6, 6-2, 6-1 என்ற கணக்கில் நவோன் வெற்றி பெற்றார். இதனால் ஜோகோவிச் இந்தத் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். 39...

டி.என்.பி.எல். 2026 சாம்பியன் கோவை கிங்ஸ்! மதுரை பாந்தர்ஸை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2026 தொடரின் இறுதிப்போட்டியில் விடா கோவை கிங்ஸ் அணி, சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி தனது மூன்றாவது TNPL கோப்பையை வென்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. கோவை அணியின் ஆன்ட்ரே சித்தார்த் அபாரமாக விளையாடி 47 பந்துகளில்...

ஆவணி மாத அமாவாசை: ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம் கோவிலில் ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத அமாவாசை, சர்வ அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு, உயிரிழந்த தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பூஜை செய்வது வழக்கம். அதன்படி ஆவணி மாத சர்வ அமாவாசையையொட்டி (செப்.10) அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். முன்னதாக அவர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடியதை தொடர்ந்து கடற்கரையில் அமர்ந்து உயிரிழந்த தங்களது முன்னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம்...

மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்தில் அன்னதானம்: உணவுப்பாதுகாப்புத்துறை சான்றிதழ் கட்டாயம்
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப். 17 ல் நடக்கஉள்ள நிலையில், பக்தர்களுக்காக அன்னதானம், நீர்மோர், பிற உணவுப்பொருட்களை வழங்குவோர் ஆன்லைனில் பதிவுச்சான்றிதழ் பெற வேண்டும் என உணவுப்பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் அன்னதானம், பிரசாதங்கள் தயாரித்து வழங்குவதற்கான பிரத்யேக ‘போக்’ சான்றிதழை மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வழங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கான ‘போக்’ சான்றிதழ் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. யாகசாலை, கும்பாபிஷேகத்தின் போது மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள், ஆவணி மூலவீதிகள், மாரட் வீதிகளில் பக்தர்கள் இலவசமாக அன்னதானம், பிரசாதம்,...

திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகுந்த நேரம் அறிவிப்பு
திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி முன்னிட்டு வரும் மே 30-ம் தேதி கிரிவலம் வர உகந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மலையே மகேசனாக எழுந்தருளி காட்சி தரும் திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தநேரம் வரும் மே 30-ம் தேதி பகல் 12.30 மணிக்கு தொடங்கி 31-ம் தேதி பகல் 2.41 மணிக்கு நிறைவடைகிறது. எனவே வரும் 30-ம் தேதி சனிக்கிழமை இரவு கிரிவலம் செல்ல...

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடக்கம்
கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி, தேவாலயங்களில் இன்று சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏசு உயிர்த்தெழுந்த தினத்தை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாகவும், அதன் முதல் நாள் சாம்பல் புதன்கிழமையாகவும் அனுசரிக்கப்படும். இந்த 40 நாள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் மீன், இறைச்சி, முட்டை முதலான அசைவ...

சாதியின் பெயரை கேட்காமல் பட்டியலில் இருந்து தேர்வு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும்: அன்புமணி
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, மக்களிடம் சாதியின் பெயரை கேட்டு பதிவு செய்யும் நடைமுறையை கைவிட்டு, மத்திய, மாநில அரசுகளின் ஓபிசி சாதிகள் பட்டியலை கணக்கெடுப்புக்கான செயலியில் இணைத்து, அதிலிருந்து சாதியின் பெயர் மற்றும் எண்ணை தேர்வு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓபிசி மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக மத்திய, மாநில அரசுகளின் ஓபிசி பட்டியல்களை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ததாகவும், அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பவை சாதிகள் அல்ல;...

அசன் மவுலானா 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்குத் தடை விதித்து இந்தியத் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அசன் மவுலானா போட்டியிட்டார். அப்போது, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இதுசம்பந்தமாக 10 நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இந்த விளம்பரங்களுக்கான செலவுத்தொகை 33 லட்சம் ரூபாயை செலவுக்கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, 2021-ம் ஆண்டு அசன் மவுலானாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்...

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவரது சகோதரர் வீடுகளில் சோதனை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், ஆர்.ஏ.புரம் மற்றும் திருச்சியில் பல்வேறு இடங்கள் என மொத்தம் 19 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவெ கே.என்.நேரு மற்றும் அவரது...

அமைச்சர்களின் உறுதியால் தூய்மைபணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
தூய்மைப் பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, சென்னையில் 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகப்பேறு மற்றும் மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும், கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில்...

நாளை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார்...

”தளபதிக்கு நன்றி சொன்ன தல”
தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகரும், ரேஸருமான அஜித் குமார் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் குமார் சினிமாவில் நடிப்பதுடன் தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அவரது ரேஸிங் குழு சில பந்தயங்களில் முதல் 3 இடங்களைப் பிடித்து சாதித்துள்ளது. பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்த ஆண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டது. அஜித் குமாரின் ரேஸிங் அனுபவம்...

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. காலை முதலே வெய்யில் வாட்டி வதைத்துவந்த நிலையில், மாலையில் மழை பெய்தது. சென்னை பட்டினப்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர், மந்தவெளி எழும்பூர், சென்ட்ரல், சேத்பட், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கும், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி, வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், மதுரவாயல், பூவிருந்தவல்லி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில்...

சென்னையில்ரூ.1200 கோடிமதிப்பீட்டில் புதிய தலைமை செயலகம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னையில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று (செப்.3) காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் விதி எண் 110-ன் கீழ், முதல்வர் விஜய் பல்வேறு திட்டங்களை அறித்தார். அதில், சென்னையில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்றும் அவர்...

குழந்தைகளுக்கே தீண்டாமைக் கொடுமையா? கனிமொழி எம்.பி. ஆவேசம்
கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்தும் அளவுக்கு, சாதி என்னும் மனநோயால் இச்சமூகம் இன்னும் பாதிக்கப்பட்டிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம’ என்று திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’புதுக்கோட்டை அருகே பள்ளி செல்லும் பழங்குடியின மாணவிகள், அரசு பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு, படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, நடத்துநரும் ஓட்டுநரும் மாணவிகளை பேருந்திலிருந்து இறக்கிவிட முயன்றதும், மறுத்த மாணவிகளை கீழே தள்ளிவிட்டதும் மனிதநேயம் அற்ற கொடூரச்...

சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் சத்யபாமா
தமிழக சட்டப்பேரவையின் மாற்று பேரவை தலைவராக (மாற்று சபாநாயகர்) தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த திருப்பூர் வடக்கு தொகுதி பெண் எம்.எல்.ஏ. சத்யபாமா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று முதன்முறையாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வெற்றிகரமாக வழிநடத்தினார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வழக்கமாக, சட்டப்பேரவை நிகழ்வுகளை சபாநாயகர் வழிநடத்துவார். அவர் அவையில் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் அவையை நடத்துவார். சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகிய இருவருமே அவையில் இல்லாத சூழ்நிலை ஏற்படும்போது, அவையை...

பாட்டிக்கு கூலிங்கிளாஸ் பரிசளித்த முதல்வர் விஜய்
மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய், அங்கிருந்து சேலம் திரும்பும் வழியில், சின்னக்காவூர் பகுதியில் விவசாயி ஒருவருடைய வீட்டுக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் உரையாடினார். முதல்வர் விஜய் வருகையால் அப்பகுதியே பெரும் பரபரப்பை அடைந்தது. முதல்வரை வரவேற்ற விவசாய குடும்பத்தினருக்கு, விஜய் பட்டு வேட்டி, சேலைகளை வழங்கினார். எந்தவிதமான விவசாயம் செய்கிறீர்கள், எவ்வாறு வருவாய் ஈட்டுகிறீர்கள் என்பது குறித்து விவசாய குடும்பத்தாரிடம் விஜய் கேட்டுள்ளார். அதற்கு, வீட்டுக்கு பின்னால் வாழை மரங்கள் நட்டு வளர்த்து வருகிறோம், அது ஒன்றே வாழ்வாதாரம் என்று கூறியிருக்கிறார்கள் விவசாய...

ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம் விற்பனை: அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 3ம் தேதி முதல் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படும் என சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று பேசிய அமைச்சர் வெங்கடரமணன், ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை உயர்ந்ததால் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகள் மற்றும் வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. அதிக வெங்காய உற்பத்தியை கொண்ட மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் வரத்து குறைந்ததன் காரணமாக, வெளிச்சந்தையில் ஒரு...

ஆம்பூரில் பள்ளி மாணவிகள் கடத்தல் 3 பேர் போக்சோவில் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், பள்ளி மாணவிகள் மூவரை ஆசைவார்த்தை கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரில் உள்ள பள்ளியில் படித்து வந்த மூன்று மாணவிகள் மாலை நேரமாகியும் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். இதனைடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிசிடிவி கட்சிகளை வைத்து பள்ளிக்கொண்டா அருகே மூன்று மாணவிகளையும் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின், ஆம்பூரைச் சேர்ந்த 18...

திருவண்ணாமலையில் பஞ்சமி நிலங்களைமீட்டுத்தரக்கோரி ஆட்சியரிடம் மனு
திருவண்ணாமலையில் பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக்கோரிமாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்கிடம் நிலமீட்பு கூட்டுயக்கத்தினர் மனு அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் நடந்தது. அப்போது மாவட்ட ஆட்சியரிடம் பஞ்சமி நில மீட்பு கூட்டுயக்கத்தின் சார்பில் ஆதிபாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் த.சிவப்பிரகாஷ் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.தமிழரசு தா.சிவதமிழன் பஞ்சமி நிலத்தை இழந்த ஆதிதிராவிடர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரவேண்டும் அதற்காக சிறப்பு சட்டம் இயற்றவேண்டும்...

நேபாளத்தில் சிக்கிய 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்
நேபாளத்தில் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ள 84 தமிழர்களையும் மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் மீட்பு பணிகள் குறித்து, பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் பேசியதாவது, நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிக்கிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்க முதல்வர் உத்தரவிட்டார். டெல்லியில் உள்ள இல்லத்தில் உதவி மையங்கள் மற்றும்...
Daily Feed
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் புறப்பட்டார்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்


இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்: 314 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்க அணி
இந்தியாவிற்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 314 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முத்துசாமி 109 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்...

கால்பந்து உலகில் முதல்முறையாக வரலாறு படைத்தார் மெஸ்ஸி
லியோனல் மெஸ்ஸி கால்பந்து வரலாற்றில் 1,300 கோல்களில் பங்களித்த முதல் வீரராக என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி முதல்முறையாக ஈஸ்டர்ன் கான்ஃபரன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. இந்தப் போட்டியிலும் லியோனல் மெஸ்ஸி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஈஸ்டர்ன் கான்ஃபரன்ஸ் அரையிறுதிப் போட்டியில் இடர் மியாமியும் எப்ஃசி சின்சினாட்டி அணியும் மோதின. இந்தப் போட்டியில் 4-0 என இன்டர் மியாமி அணி அபார வெற்றி பெற்றது. மெஸ்ஸி 19-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். மேலும்,...

நியூசிலாந்து அணி அறிவிப்பு: கம்பேக் கொடுத்த கேன் வில்லியம்சன்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும், அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் நியூசிலாந்து கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து, இரண்டு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்...

ஆஷஸ் முதல் டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ்: 9 விக்கெட்டுகள் இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்
இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று (நவ.21) தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த...
ரோஜர் ஃபெடரருக்கு “ஹால் ஆஃப் ஃபேம்’ கௌரவம்
சுவிட்சர்லாந்து டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர், ‘இன்டர்நேஷனல் டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம்’-இல் சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அமெரிக்காவின் ரோட் ஐலேண்டில் உள்ள இந்த அமைப்பானது, டென்னிஸ் விளையாட்டுக்கு சிறப்பாக பங்களித்தோரை கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான பட்டியலுக்கு ஃபெடரர் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர், இந்த ஹால் ஆஃப் ஃபேம் அருங்காட்சியகத்தில் அதிகாரபூர்வமாக இணைக்கப்படுவார். கடந்த 2022-இல் டென்னிஸிலிருந்து ஓய்வுபெற்ற ஃபெடரர், அந்த விளையாட்டின் வரலாற்றில் ஜிம்மி கானர்ஸிக்கு (106) பிறகு...
ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: போட்டி அட்டவணை வெளியீடு
19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 16-வது ஐ.சி.சி. ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடைபெற உள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவுகளில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று...
ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைப்போம்: இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைப்போம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை(நவ.21) பெர்த் நகரில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை வென்று சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி களம் இறங்கியுள்ளது. கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் 2010- 11-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசஸ் கோப்பையை தான் இங்கிலாந்து அணி வென்றது. அதன் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி...
2-ஆவது டெஸ்டில் சுப்மன் கில் விலகல்: கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்
கழுத்து வலி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கேப்டன் சுப்மன் கில், கவுஹாத்தியில் நடைபெறவுள்ள 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, துணை கேப்டன் ரிஷப் பண்ட் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். மேலும், ஆடும் லெவனில் கில்லின் இடத்திற்கு இளம் வீரர் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது, முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்கையில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்லுக்குக் கழுத்தில்...
100-ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து சாதனை படைத்தார் முஷ்பிகுர் ரஹீம்
அயர்லாந்து அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம். அயர்லாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் போட்டி இன்று (நவ.20) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த...
சஞ்சு சாம்சனுக்கு சிறப்பு வீடியோ வெளியிட்டது சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தற்போது சஞ்சு சாம்சனுக்காக சிறப்பு வீடியோ வெளியிட்டு அவரை வரவேற்றுள்ளது. 19-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவ.15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம்அதிகாரபூர்வமாக...
சேப்பாக்கம் மைதானம் புதுப்பிப்பு: வீடியோ வெளியிட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
சென்னை சேப்பாக்கம் மைதானம் முழுவதுமாக புதுபிக்கப்பட்ட வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் மினி ஏலம் டிச.15-ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்தல், கழற்றி விடுதல் மற்றும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றியுள்ளனர். இதனால் மினி ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிக்கு இடம் பெற உள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜடேஜாவை ராஜஸ்தான்...
டெஃப்லிம்பிக்ஸில் தங்கம் வென்றார் அனுயா பிரசாத்
ஜப்பானில் நடைபெற்று வரும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்(டெஃப்லிம்பிக்ஸ்) போட்டியில் இந்தியாவை சேர்ந்த அனுயா பிரசாத் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஜப்பானில் நடைபெறும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில், துப்பாக்கி சுடுதலில் இந்தியர்கள் அசத்தி வருகின்றனர். போட்டியின் 2-ஆம் நாளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் அனுயா பிரசாத் 241.1 புள்ளிகளை எட்டி உலக சாதனையுடன் தங்கம் வென்றார். அதிலேயே பிரஞ்சலி பிரசாந்த் துமல் 236.8 புள்ளிகளுடன் வெள்ளியை தனதாக்கினார். ஈரானின் மஹ்லா சமீ வெண்கலப் பதக்கம் பெற்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற...
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை...
பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயல்: 14 லட்சம் பேர் வெளியேற்றம்
பிலிப்பைன்ஸை தாக்கவிருக்கும் பங்வோங் புயலால் 14 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதனால் அங்கு...
டொனால்டு டிரம்ப்பின் காசா திட்டம்: ஹமாஸ் நிராகரிப்பு
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு பல்வேறு அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அறிவித்தார். காசாவின் திட்டத்தில் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க...
ஹாங்காங்கில் பயங்கர தீ விபத்து; 65 பேர் பலி, 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில், 300 பேரை...
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.6 என பதிவு
இந்தோனேசியா சுமத்ரா தீவில் இன்று (வியாழக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.56 மணியளவில் 25 கிமீ ஆழத்தில்...
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை: டாக்கா சிறப்பு நீதிமன்றம்
அரசு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு...
பிரேசில் முன்னாள் ஜெயிர் போல்சோனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை: மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி
அதிபர் ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான குற்றச்சாட்டில், பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சோனாரோ, 27 ஆண்டு தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்பட்டார்.தென் அமெரிக்க நாடான பிரேசிலில்,...
“உஸ்மான் ஹாடியை கொன்றது நீங்கள்தான்’’ – யூனுஸ் அரசு மீது சகோதரர் குற்றச்சாட்டு
டாக்கா: ‘‘உஸ்மான் ஹாடியைக் கொன்றது நீங்கள்தான், இப்போது இதை ஒரு பிரச்சினையாகப் பயன்படுத்தி தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறீர்கள்” என்று மாணவர் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் சகோதரர்...

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.சமூக ஊடக தளங்களால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்நாட்டுப் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். டென்மார்க் வரலாற்றிலேயே இளம் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மெட் ஃபிரடெரிக்சன், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது குழந்தைகள் அதிகம் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் குறித்து கவலை தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து...
Sign up for the Spotlight Newsletter:

நாளை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார்...

நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் இதுவரை 84 பேர் மீட்பு; 320 பேர் மாயம்
புதுடில்லி: நேபாள வெள்ளத்தில் மாயமாகி இருக்கும் இந்தியர்கள் 320 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், கடந்த 26ம் தேதி, அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கியுள்ள இந்த பெரும் துயரத்தில், தமிழகத்தில் இருந்து ஆன்மிக யாத்திரை சென்ற 100 பேர் உட்பட, 300க்கும் அதிகமான இந்தியர்கள் குறித்து எந்த...

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல்
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வெளியான முக்கிய தகவல் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கன முதல் மிக கனமழை...
